உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாயமான தொழிலாளி உடல் கண்டெடுப்பு

மாயமான தொழிலாளி உடல் கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி : தண்டலை கிராமத்தில் மாயமான கூலித் தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 46; விவசாய கூலித்தொழிலாளி. இவர், கடந்த 17ம் தேதி மயானத்தில் குழிவெட்டும் பணியில் ஈடுபட்டார். அதன் பிறகு அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் மயானத்திற்கு அருகே உள்ள விளைநில கிணற்றில் அவரது உடல் மிதந்தது. கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆனந்தன் உடலை மீட்டு, அவரது இறப்புக்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை