உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புதிய பஸ் நிலையம் அமையும் இடம் எம்.எல்.ஏ., ஆய்வு

புதிய பஸ் நிலையம் அமையும் இடம் எம்.எல்.ஏ., ஆய்வு

ரிஷிவந்தியம் : பகண்டை கூட்ரோட்டில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் தாலுகா, பி.டி.ஓ., உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, போலீஸ் நிலையம் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வாணாபுரத்திற்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் பஸ் நிலையம் இல்லை. பகண்டை கூட்ரோடு மும்முனை சந்திப்பு பஸ் நிறுத்தமாக செயல்பட்டு வருகிறது. முக்கிய பகுதியாக உள்ள மும்முனை சந்திப்பில் பஸ் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகிறது. இதையடுத்து பகண்டை கூட்ரோடு புற்றுமாரியம்மன் கோவில் அருகே உள்ள காலி இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், ஒன்றிய துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, ஊராட்சி தலைவர் தீபா அய்யனார், துணைத்தலைவர் வசந்தி ராஜா, சண்முகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ethiraj
செப் 15, 2025 09:28

Take loan from market and complete project before next election


sasikumaren
செப் 14, 2025 23:46

தற்போது இருக்கும் இடத்திற்கு அருகில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எம்எல்ஏ அல்லது அமைச்சரின் நிலம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிலம் உள்ளது என்று அங்கு பேருந்து நிலையம் அமைத்து மக்களை கொல்லாதீர்கள்


R Gladson
செப் 14, 2025 19:52

பஸ் நிலையம் - பேருந்து நிலையம் போலீஸ் ஸ்டேசன் - காவல் நிலையம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை