உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  டீ கடையில் பணம் திருட்டு

 டீ கடையில் பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே டீ கடையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பணம், பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரை சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் அபிகண்ணன், 26; இவர், சாமியார்மடம் - பெருவங்கூர் சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கடைக்குள் சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி