உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகன் மாயம் தாய் புகார்

மகன் மாயம் தாய் புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புது துணி வாங்க சென்ற மகனை காணவில்லை என அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி அருகே நரிமேடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் கஜேந்திரன்,16; இவர், பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு, நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் கிளீனராக வேலை செய்கிறார். கடந்த 20ம் தேதி தீபாவளிக்காக புதிய துணி வாங்க சென்ற கஜேந்திரன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன கஜேந்திரனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் பார்வதி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை