உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தடுப்பு சுவர் இல்லாத வாய்க்கால் வாகன ஓட்டிகள் திக்.. திக். .

தடுப்பு சுவர் இல்லாத வாய்க்கால் வாகன ஓட்டிகள் திக்.. திக். .

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஏரி வாய்க்காலில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். கள்ளக்குறிச்சி காந்தி ரோடு அதிகளவு போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. வாய்க்கால் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையால் ஆக்கிரிமப்பு அகற்றப்பட்டன. கோர்ட் உத்தரவுப்படி இரு கோவில்களும் இடித்து அகற்றப்பட்டன. ஆனால் அதன்பின் கால்வாய் துார் வார, அதன் மீது தடுப்புக்கட்டைகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இடிக்கப்பட்ட கோவில் இடிபாடுகள் அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். கால்வாயில் தற்போது கழிவுநீர் கலந்து, ஏரிகளுக்கு செல்கிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் தள்ளுவண்டிகள், வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமிக்க துவங்கி உள்ளனர். நாளடைவில் அதன்மீது கட்டடங்கள் கட்டப்பட்டு, மீண்டும் அப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கி மழைபெய்து வருகிறது. சாலையோர கால்வாய் பள்ளங்களுக்கு தடுப்பு சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் உயிர் அபாயத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே கள்ளக்குறிச்சியில் ஏரி வாய்க்காலை சீரமைத்து பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை