உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர்: மணம்பூண்டி போக்குவரத்துக் கழக பணிமனை முன், டவுன் பஸ் வசதி கோரி காடகனுார், சித்தாமூர் கிராமங்களைச் சேர்ந்த மா.கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காடகனுார் கிளைச் செயலாளர் வீரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்மாறன், வட்டக் குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி, செயலாளர் கணபதி, உறுப்பினர் பழனி, நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால், தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 3:45 மணிக்கு திருவண்ணாமலை - திருக்கோவிலுார் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். கண்டாச்சிபுரம் தாசில்தார் முத்து, அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத், சப் இன்ஸ்பெக்டர் குருபரன், டெப்போ மேலாளர் நாராயணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.விழுப்புரம் கோட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும், ஆய்வுக்குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி