பங்காரம் லட்சுமி கல்லுாரியில் என்.சி.சி., பிரிவு துவக்க விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் படை புதிய பிரிவு துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குநர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சக்திவேல் வரவேற்றார். தமிழ்நாடு பட்டாலியன் 6வது தேசிய மாணவர் படை பிரிவின் தலைவர் கர்னல் சக்கரபர்த்தி, தேசிய மாணவர் படை நிர்வாக அதிகாரி நாராயண், தேசிய மாணவர் படை பெண்கள் பயிற்சியாளர் தேவசேனா ஆகியோர் பங்கேற்று தேசிய மாணவர்கள் படையினால் மாணவர்களுக்கு கிடைக்கும் ஒழுக்கம், பயன்கள், முக்கியத்துவம் மற்றும் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தனர். கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் வாழ்த்தி பேசினார். கல்லுாரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.