உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புறவழிச்சாலை குறுக்கே வழித்தடம் நீலமங்கலம் கிராம மக்கள் மறியல்

புறவழிச்சாலை குறுக்கே வழித்தடம் நீலமங்கலம் கிராம மக்கள் மறியல்

கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் ஏரிக்கரை நுழையும் இடத்தில் புழவழிச்சாலையின் குறுக்கே கடந்து செல்ல வழித்தடம் ஏற்படுத்தி தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.சேலம் - உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏரிக்கரை அருகே வாகனம் பழுது பார்க்கும் கடைகள், வாட்டர் சர்வீஸ் கடை, பர்னிச்சர் கடை, தனியார் பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. நீலமங்கலம் கிராம மக்கள் புறவழிச்சாலையின் குறுக்கே கடந்து கள்ளக்குறிச்சி நகர பகுதிக்கு செல்வர். இந்த வழித்தடம் மக்களுக்கு எளிமையாக இருந்தது.இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால், சாலையின் குறுக்கே கடந்து செல்ல முடியவில்லை. இதனால், பொதுமக்கள் சுமார் அரை கி.மீ., தொலைவிற்கு மேல் சுற்றி சென்றனர். பைக்கில் செல்பவர்கள் சென்டர் மீடியன் தடுப்பு சுவரை உடைத்து, புறவழிச்சாலையின் குறுக்கே கடந்து சென்றனர். இதையடுத்து, உடைக்கப்பட்ட இடத்தில் சென்டர் மீடியனில் ஏற முடியாதவாறு பேரிகார்டு அமைக்கப்பட்டது.இந்நிலையில், பொதுமக்கள் எளியைாக செல்லும் வகையில் நீலமங்கலம் மேம்பாலம் அருகே புறவழிச்சாலையின் குறுக்கே வழித்தடம் ஏற்படுத்தி தர வலியுறுத்தி, ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் பொதுமக்கள் சிலர் நேற்று காலை 11 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி., தேவராஜ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து, காலை 11.15 மணியளவில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர். இதனால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி