உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நோ பாக்கிங்கில் நிறுத்திய ஆட்டோக்கள் ஓட்டுநர்களுக்கு நுாதன தண்டனை அளிப்பு

நோ பாக்கிங்கில் நிறுத்திய ஆட்டோக்கள் ஓட்டுநர்களுக்கு நுாதன தண்டனை அளிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்திய 15 ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து, ஓட்டுநர்களுக்கு நுாதன தண்டனை அளித்தனர்.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு, கச்சேரி சாலை, அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பஸ் நிலையம் மற்றும் நுழைவு வாயில் பகுதிகளில் போக்குவரத்து இடையூராக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றனர்.இதனையொட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் நோ பார்க்கிங் பகுதியில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிய 15 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவர்களுக்கு, இனி நாங்கள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூராக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க மாட்டோம் என்று உறுதி அளிக்கிறேன் என 'வெள்ளை தாளில்' மூன்று முறை எழுதி உறுதிமொழி ஏற்க செய்து நுாதன தண்டனை வழங்கினர். இது போல் மீண்டும் செயல்பட்டால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டும் என எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ