உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி அஞ்சலகத்தில் புதிய தொழில்நுட்ப சேவை து வக்கம்

கள்ளக்குறிச்சி அஞ்சலகத்தில் புதிய தொழில்நுட்ப சேவை து வக்கம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சேவையை கோட்ட கண்காணிப்பாளர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகம், துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சேவை (அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0) நேற்று பயன்பாட்டிற்கு வந்தது. கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகத்தில் புதிய தொழில் நுட்ப சேவையை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதன் மூலம் வாடிக்கையாருக்கு விரைவான சேவை, பண பரிவர்த்தனைகளை யு.பி.ஐ., மூலமும் செலுத்தல் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும். நிகழ்ச்சியில், அஞ்சல் துறையில் பணிபுரியும் அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ