மேலும் செய்திகள்
திருமணமான புதுப்பெண் மாயம்
27-Jun-2025
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே திருமணமான 5 வது நாட்களில் மாயமான புதுமண பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த கோளபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் சந்தியா, 19; இவருக்கும் உளுந்லுார்பேட்டை அடுத்த நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கும், கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த 1ம் தேதி தாய் வீட்டிற்கு வந்த சந்தியா, மதியம் 1:30 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறி வெளியில் சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சந்தியாவின் தாய் உமா கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து சந்தியாவை தேடி வருகின்றனர்.
27-Jun-2025