உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டிரான்ஸ்பார்மரில் ஆயில், காப்பர் திருட்டு

டிரான்ஸ்பார்மரில் ஆயில், காப்பர் திருட்டு

கள்ளக்குறிச்சி : ஆலத்துார் டிரான்ஸ்பார்மரில் ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள ஆயில், காப்பர் கம்பி திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி ஆலத்துாரில் உள்ள மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) இருந்த 225 லிட்டர் ஆயில் மற்றும் காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கடந்த 16ம் தேதி பராமரிப்பு பணிக்கு சென்ற மின்பகிர்மான கம்பியர் சரவணன், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருடுபோன ஆயில், காப்பர் கம்பி மதிப்பு ரூ. 1.85 லட்சம். மின்வாரிய இளமின் பொறியாளர் விசுவநாதன் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை