உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி : எலனவாசூர்கோட்டை அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கூத்தனுார் அருகே ரோந்து சென்றனர். அப்போது, அரசு அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த எறையூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆப்ரகாம் மகன் காட்டுமனுஷன் என்கிற குழந்தைராஜ், 36; என்பவரை கைது செய்தனர்.இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். இவரது நடடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் குழந்தைராஜை கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.இதையடுத்து, ஏற்கனவே கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைராஜிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலினை போலீசார் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை