உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் சார்பு நீதிமன்றம் திறப்பு

சங்கராபுரம் சார்பு நீதிமன்றம் திறப்பு

மூங்கில்துறைப்பட்டு : சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய சார்பு நீதிமன்றத்தை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தண்ட பாணி, கிருஷ்ணன் ராமசாமி, முரளிசங்கர் முன்னிலையில், தலைமை நீதிபதி மணிந்திரமோகன் ஸ்ரீவஸ்தவா காணொலி வாயிலாக திறந்து வைத்தார். முன்னதாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இருசன் பூங்குழலி வரவேற்றார். விழாவில் கலெக்டர் பிரசாந்த், எஸ்.பி., மாதவன் மற்றும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவி சிறப்புரையாற்றினர். நீதிபதிகள் ராஜசேகரன், வரதராஜ் ஆறுமுகம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆதியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை