உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இயற்கை வேளாண் விழிப்புணர்வு ஊர்வலம்

இயற்கை வேளாண் விழிப்புணர்வு ஊர்வலம்

உளுந்துார்பேட்டை, ; ராவுத்தராயன்குப்பத்தில் இயற்கை வேளாண் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ராவுத்தராயன்குப்பம் அரசு துவக்கப் பள்ளியில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவர்களும், அரசு துவக்க பள்ளி மாணவர்களும் பங்கேற்ற விவசாய அடையாள அட்டை பெறுதல் குறித்தும், இயற்கை வேளாண்மை பற்றியும், உழவன் செயலியின் நோக்கம் குறித்தும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தினர், முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்து சென்று பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தை உளுந்துார்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் கிருபாகரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துணை வேளாண் அலுவலர் பழனிவேல், உதவி வேளாண் அலுவலர்கள் ராமச்சந்திரன், குணசேகரன், முருகன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப், தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி பேராசிரியர்கள் கோகுல் பிரனேஷ், சாத்விகா, முகேஷ் குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ