உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி

புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே, தேர்பவனி விழாவில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலயம், 155 வது ஆண்டு பெருவிழா, கடந்த மே, 21ம் தேதி திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன் தினம் இரவு பெருவிழா திருப்பலி நிகழ்ச்சியும் தேர்பவனியும் நடைபெற்றது. அப்போது புனித ஜெப மாலை மாதா, புனித காவல் துாதர், புனித வணக்கம் மாதா, புனித சூசையப்பர், புனித சகாய மாதா, புனித அந்தோனியார் தேர்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பவனி வந்தன. நேற்று முன்தினம் இரவு தேவாலயத்தில் துவங்கிய தேர் பவனி, முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று காலை தேவாலயத்தில் நிறைவு பெற்றது. நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பலியும், கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ