உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேகத்தடை மீது பெயிண்ட் பூச்சு

வேகத்தடை மீது பெயிண்ட் பூச்சு

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதி நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் பூசும் பணி துவங்கியது. சங்கராபுரம் நகர பகுதி சாலைகளில் அதிகளவில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் பூசப்பட்டு இருந்த வெள்ளை பெயிண்ட் மறைந்து போனதால், வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில், சங்கராபுரம் பகுதி நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் பூசும் பணி நேற்று துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை