மேலும் செய்திகள்
சித்தலுார் கோவில் தேர் திருவிழா
08-Mar-2025
தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி புற்றுமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த புற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மார்ச்., 26 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் நாள்தோறும் அம்மன் வீதி உலா நடந்தது. இந்த நிலையில் கடந்த,1, ம் தேதி பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்வான, தேர் திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது.இதில், அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் முதுகில் அலகு குத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, இரவு மாரியம்மன் சரித்திர தெருக்கூத்து நாடகம் நடந்தது.
08-Mar-2025