உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், நல்லாயன் தேவாலயம் சார்பில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது.இயேசுபிரான் ஜெருசலேம் நகருக்குள் வெற்றியோடு, நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் குருத்தோலை ஞாயிறு தினத்தன்று அனுசரிக்கின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலுார், பஸ் நிலையம் அருகே உள்ள நல்லாயன் தேவாலயம் சார்பில், அலெக்ஸ் மற்றும் பங்கு தந்தை கிளிட்டஸ் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள், பெண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து குருத்தோலையை கையில் ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேவாலயத்தை அடைந்தனர். அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை