உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி, மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சேகர்,கவுதமி முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், கல்யாணசுந்தரம், கந்தநாதன், சக்திவேல், ஜெயபிரகாஷ், குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழியை கற்பிக்கவும் மற்றும் பாட மொழியாக்கவும் வேண்டும்; அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாகவும், கோர்ட்டுகளில், வழக்காடு மொழியாகவும் சட்டம் இயற்ற வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை