உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நுாரோலையில் டாஸ்மாக் கடை 2 நாட்கள் மூடக்கோரி மனு

நுாரோலையில் டாஸ்மாக் கடை 2 நாட்கள் மூடக்கோரி மனு

கள்ளக்குறிச்சி : ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை பெரியநாயகி அம்மன் கோவில் முப்பூசை விழாவையொட்டி, 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:நுாரோலை கிராம எல்லையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் முப்பூசை விழா வரும் 28ம் தேதி நடக்கிறது. இதில், நுாரோலை மற்றும் சேரந்தாங்கலைச் சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து சுவாமி வழிபாடு செய்வர்.கோவிலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை உள்ளது. மதுபாட்டில் வாங்க வருபவர்கள், சாலையிலேயே நின்று மது அருந்தி, தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். ஒரு சில நேரங்களில் டாஸ்மாக் கடைக்கு அருகே தகராறு ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. திருவிழாவின் போது டாஸ்மாக் கடை திறந்திருந்தால் வீண் பிரச்னையும், சுவாமி வழிபட செல்லும் பெண்களுக்கு அசவுகரியமும் ஏற்படும்.எனவே, வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நுாரோலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி