மேலும் செய்திகள்
தமிழக உரிமை மீட்பு பயணம் அன்புமணி பிரசாரம்
15-Aug-2025
சின்னசேலம்; சின்னசேலம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரூராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பப்லு, துணைச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட தலைவர் ரமேஷ், வன்னியர் சங்க துணைத் தலைவர் ராமு முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கோவிந்தன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் ரத்தினகுமாரி, துணைச் செயலாளர் மணி, வடக்கனந்தல் நகர செயலாளர் மணிகண்டன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், சின்னசேலம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 70 கடைகளை கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கி வருவதை கண்டிப்பது. மூங்கில்பாடி சாலையில் முறையான கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும். வாரசந்தையை முறையாக பரமாரிக்காத பேரூராட் நிர்வாகத்தை கண்டிப்பது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. ஒன்றிய தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.
15-Aug-2025