உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது போக்சோ

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது போக்சோ

ரிஷிவந்தியம்; வாணாபுரம் அருகே சிறுமியை கடத்தி சென்றது தொடர்பாக வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.வாணாபுரம் அடுத்த அவிரியூரை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 23ம் தேதி பகண்டைகூட்ரோட்டில் உள்ள உறவினரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். தொடர்ந்து, பல மணி நேரங்களாகியும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடி, விசாரித்தனர். அதில், ஓடியந்தலை சேர்ந்த சின்னபையன் மகன் ஆதிசிவன்,19; சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது. சிறுமியின் தாய் புகாரின் பேரில் ஆதிசிவன் மீது போக்சோ பிரிவின் கீழ் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !