உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ

பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை கர்ப்பமாக்கி, திருமணம் செய்ய மறுத்தவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகன் தீனா, 22; இவர், கடந்த 2 ஆண்டுகளாக 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருங்கிப் பழகியதில் பெண் கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் கூறியதற்கு, தீனா மறுத்துள்ளார்.இதுகுறித்து பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் தீனா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை