மேலும் செய்திகள்
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
16-Oct-2025
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நுாலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. திருக்கோவிலுார் நுாலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. வாசகர் வட்ட தலைவர் உதியன் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நுாலகர் தியாகராஜன் வரவேற்றார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கல்யாண் குமார், கலாம் மாணவர் விழிப்புணர்வு தலைவர் பொன்முருகன், தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன் முன்னிலை வகித்தனர். புரவலர் தங்கராசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு 'மாமேதை அப்துல் கலாம்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. இதில் பங்கேற்ற வாசகர்கள், கவிஞர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. நுாலக பணியாளர் தேவி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
16-Oct-2025