உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணிடம் நகை திருட்டு போலீஸ் விசாரணை

பெண்ணிடம் நகை திருட்டு போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டியன்குப்பத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி நதியா,35; இவர் கடந்த, 28ம் தேதி சங்கராபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு தங்கை ராஜலட்சுமி, மோதிரம், செயின், காப்பு உள்ளிட்ட 76 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அவரிடம் கொடுத்து அடகு வைத்து, பணத்தை எடுத்து வருமாறு கூறினார். உடன், நதியா நகைகளை தனது 'ஹாண்ட் பேக்'கில் வைத்து, தனியார் பஸ்ஸில் கள்ளக்குறிச்சிக்கு சென்றார்.கள்ளக்குறிச்சி அருகே பணம் எடுப்பதற்காக, 'ஹாண்ட் பேக்'கை திறந்து பார்த்த போது, அதில் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !