உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாலிபர் சாவு போலீஸ் விசாரணை

வாலிபர் சாவு போலீஸ் விசாரணை

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமணி, 35. இவர், கடந்த ஒரு வருடமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணி அளவில் முத்துமணிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து முத்துமணி இறந்து விட்டதாக கூறினார். புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !