இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
கச்சிராயபாளையம: கச்சிராயபாளையம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கச்சிராயபாளையம் அடுத்த கா.அலம்பலத்தை சேர்ந்தவர் மாரியாப்பிள்ளை மகள் சிவசங்கரி, 19; கடந்த 16ம் தேதி இரவு 9:00 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை. இது குறித்து, தாய் காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.