உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி மாயம் போலீஸ் விசாரணை

சிறுமி மாயம் போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் ரமா,15; அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் கடந்த, 25ம் தேதி கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.அச்சமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில், தாய் பெரிய நாயகம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ