மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி முதியவர் பலி
24-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வீட்டில் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா, 38; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சமீம். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளாக சமீம் தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். சாதிக்பாஷா தீப்பெட்டி தொழிற்சாலை நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். குடிப்பழக்கம் உடைய சாதிக்பாஷா நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கச் சென்றவர், நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு இறந்து கிடந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சாதிக் பாஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Oct-2025