உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பீரோவில் இருந்த நகை மாயம் போலீஸ் விசாரணை

பீரோவில் இருந்த நகை மாயம் போலீஸ் விசாரணை

கச்சிராயபாளையம்: அம்மாபேட்டை பகுதியில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகை காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி புஷ்பவள்ளி, 31; இவர் கடந்த 31ம் தேதி தீபாவளி அன்று தனது 6 சவரன் நகைகளை பீரோவில் வைத்துள்ளார்.கடந்த 3ம் தேதி பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 3 சவரன் நெக்லஸ், 2 சவரன் செயின் மற்றும் அரை சவரனில் 2 மோதிரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. புஷ்பவள்ளி அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !