மேலும் செய்திகள்
மகள் மாயம்: தந்தை புகார்
29-Apr-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பெண்ணிடம் உதவி கேட்பது போல், 5 சவரன் செயினை பறித்துச் சென்ற தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மனைவி லட்சுமி, 55; இவர், உலகங்காத்தான் பகுதியில் உள்ள சுண்டல் கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மதியம் 2:30 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, பைக்கில் மனைவியுடன் வந்த நபர், தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.பரிதாபமடைந்த லட்சுமி, பைக்கில் அமர்ந்து அந்த பெண்ணை பிடித்தபடி சென்றார். தச்சூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சென்றபோது, உடல் நிலை சரியில்லாத அந்த பெண் வாந்தி வருவதாக கூறியுள்ளார். உடன் பைக்கை நிறுத்தி இறங்கியதும், லட்சுமி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு தம்பதி இருவரும் பைக்கில் தப்பினர்.லட்சுமி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம தம்பதியை தேடி வருகின்றனர்.
29-Apr-2025