உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 12ம் தேதி நடக்கவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான முன்னேற்பாடு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வரும் 12ம் தேதி நடக்க உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. மாவட்டத்தில் 18 இடங்களில் 277 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது. இத்தேர்வு எழுத 5,334 பேர் விண்ணப்பித்துள்ளனர். முறைகேடுகளை தடுக்க டி.ஆர்.ஓ., தலைமையில் சி.இ.ஓ., மற்றும் தலைமை ஆசிரியர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு, தேர்வர்களுக்காக கூடுதல் பஸ் வசதி, தடையில்லா மின்சார வசதி வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், தேர்வினை சிறப்பாக நடத்த துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார்சிங், சி.இ.ஓ., கார்த்திகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, டி.ஆர்.ஓ., முருகன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை