உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குண்டும் குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி

குண்டும் குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி

சங்கராபுரம் ; சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் வழியாக திருவண்ணாமலை, பெங்களூரு, சென்னை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினசரி அதிகளவில் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. சங்கராபுரம் ஆற்றுப்பாலம் அருகிலிருந்து தேவபாண்டலம் செல்லும் தார் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரவில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து காயமடைவது தொடர்கிறது.எனவே, தேவபாண்டலத்தில் பழுதான தார் சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ