பா.ஜ., மாநில தலைவருக்கு நினைவு பரிசு வழங்கல்
கள்ளக்குறிச்சி : சர்வதேச அரசியல் மேற்படிப்பை முடித்துவிட்டு, தமிழகம் வந்த பா.ஜ., மாநில தலைவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் நினைவு பரிசு வழங்கி வரவேற்றனர்.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, சர்வதேச அரசியல் மேற்படிப்புக்காக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு 3 மாதங்கள் தங்கி பயின்ற நிலையில், படிப்பை முடித்து விட்டு கடந்த கடந்த 1ம் தேதி தமிழகம் வந்தார். இதையொட்டி, பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் கார்த்திகாயினி முன்னிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள், மாவட்ட செயலாளர் சதீஷ் ஆகியோர் சென்னையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து, மர சிற்பத்திலான முருகன் சுவாமி சிலையை நினைவு பரிசாக வழங்கி, வரவேற்றனர். மாவட்ட செயலாளர் பிரகாஷ் உடனிருந்தார்.