உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழில் திறனறிவு தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, அறிவியல் இயக்கம் மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ் தலைமை தாங்கினார். டாக்டர் அருண்பாண்டியன் வினாடி-வினா போட்டியை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் அன்புமணி, தொழில் திறனறிவு தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் மற்றும் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் கருணாகரன், துணைச் செயலாளர் மோகன் ராம், வட்டார செயலாளர் செல்வம் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தினர். விழாவில் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், வானவில் மன்ற கருத்தாளர் தினேஷ், ஹரிஹரன், சுகணேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயலட்சுமி, வட்டார நிர்வாகிகள் வனஜா, சுயம்வரசி, அந்தோணிசாமி, ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை