தற்காப்பு கலை பயிற்சி: மாணவர்களுக்கு பரிசு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த கொடுக்கப்பட்டு வெங்கடேஸ்வரா நர்சரி பிரைமரி பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருக்கோவிலுார் அடுத்த கொடுக்கப்பட்டு வெங்கடேஸ்வரா நர்சரி பிரைமரி பள்ளியில் இன்டர் ஸ்கூல் டேக்வாண்டோ போட்டி நடந்தது. பள்ளி தாளாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். தற்காப்பு கலை வீரர்கள் விஜய், வெங்கடேசன், சமூக ஆர்வலர் சிதம்பரநாதன் வாழ்த்தி பேசினர். தற்காப்பு கலை சங்கத் தலைவர் அஞ்சலை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பயிற்சியாளர் வேல்முருகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்ற னர்.