மேலும் செய்திகள்
தீயணைப்பு நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி
14-Sep-2024
கள்ளக்குறிச்சி: சிறுவத்துாரில் நுாறு நாள் வேலை செய்து கொண்டிருந்த மக்களுக்கு, தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவத்துார் கிராமத்தில் தீயணைப்பு துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். நிலைய அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி தலைவர் பாலாயி கணேசன், தனியார் தொண்டு நிறுவன தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நுாறு நாள் வேலை செய்து கொண்டிருந்த கிராம மக்களுக்கு, தீ தடுப்பு முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தீ விபத்தின் போது பதற்றமின்றி அதை அணைக்கும் வழிமுறை, தீ விபத்தின் போது அதில் சிக்கிகொள்ளாமல் இருத்தல், மழைக்காலங்களில் தண்ணீரில் சிக்கியவர்களை காப்பாற்றும் விதம் குறித்து எடுத்துரைத்தனர்.
14-Sep-2024