தியாகதுருகம் ஒன்றியத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு
தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் நடைபெறும் திட்டப் பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள பல்லகச்சேரி, பீளமேடு, திம்மலை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள், அரசின் வீடு கட்டும் திட்டம், அங்கன்வாடி கட்டடம், குளம் வெட்டும் பணிகளை திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் நேற்று ஆய்வு செய்தார். பி.டி.ஓ., கொளஞ்சி வேலு, ஒன்றிய பொறியாளர் பழனிவேல், துணை பி.டி.ஓ., ஆறுமுகம், பணி மேற்பார்வையாளர் சக்திவேல், முருகன், ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், நிஷா, ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துலட்சுமி, சின்னதுரை, தேவி, ஊராட்சி செயலாளர்கள் மாணிக்கம், முத்துவேல் உடன் இருந்தனர்.