மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
02-Sep-2024
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே சொத்து தகராறில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது வழக்கு பதிந்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் அடுத்த வினைதீர்த்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகசபை, 53; இவரது அண்ணன் செல்வராஜ், 62; இவர்களுக்கிடையே பூர்வீக சொத்து பாகப் பிரிவினை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. கடந்த 16ம் தேதி இரு குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், செல்வராஜ், குழந்தைவேல் மனைவி ரூபா, 46; மற்றும் 16 வயது சிறுவன், கனகசபை, அவரது மனைவி அபிராமி, செந்தில் மனைவி சசிகலா, 30; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து செல்வராஜ், ரூபா, சசிகலா ஆகிய 3 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.
02-Sep-2024