உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அ.தி.மு.க., மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட மகளிரணி தலைவி அழகுவேலுபாபு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் குமரகுரு, இந்து மதத்தையும், பெண்களையும் இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பேசினார்.முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், ராஜேந்திரன், அருணகிரி, அய்யம்பெருமாள், கதிர் தண்டபாணி, நகர செயலாளர்கள் பாபு, ஷ்யாம்சுந்தர், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, மகளிரணி இணைச் செயலாளர்கள் சத்யா, உமா, திலகா மற்றும் பிற அணி மாவட்ட செயலாளர்கள் ஞானவேல், தங்கபாண்டியன், சீனிவாசன், ராஜீவ்காந்தி, வினோத், அய்யாக்கண்ணு, பொன்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ