உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஊராட்சி தலைவரை கண்டித்து தர்ணா

 ஊராட்சி தலைவரை கண்டித்து தர்ணா

மூங்கில்துறைப்பட்டு: நவ. 15-: மூங்கில்துறைப்பட்டில் அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர் 4வது வார்டு உறுப்பினர் பாஸ்கர். இவரது, 4வது வார்ட்டில் ஊராட்சி சார்பில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராததால் நேற்று அப்பகுதி மக்கள் சிலருடன் தர்ணாவில் ஈடுப்பட்டார். அப்போது, வார்டு உறுப்பினர் பாஸ்கர் கூறுகையில்; ஊராட்சி தலைவர் பரமசிவம் தனக்கு இப்பகுதி மக்கள் ஓட்டுபோடவில்லை என்பதால் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாமல் புறக்கணிக்கிறார். கழிவுநீர் வாய்க்கால் உடைப்பு சரிசெய்யவில்லை. மாதம் ஒருமுறை வந்து குப்பை அள்ளுகின்றனர். குடிநீர் பைப் உடைந்துள்ளது. எனவே, ஊராட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறினார். மூங்கில்துறைப்பட்டு போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி