உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆலத்துாரில் ஆர்ப்பாட்டம்

ஆலத்துாரில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, மத்திய பா.ஜ., அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் பஸ் நிறுத்தம் அருகே, தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., கண்டன உரையாற்றினார்.இதில், ஒன்றிய பொருளாளர் பாலு, ஒன்றிய கவுன்சிலர் பிரியா ராஜாராம், ஒன்றிய துணை செயலாளர்கள் மணிவண்ணன், சுதா பிரியா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி