உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நிவாரண உதவி வழங்கக்கோரி அரகண்டநல்லுாரில் மறியல்

நிவாரண உதவி வழங்கக்கோரி அரகண்டநல்லுாரில் மறியல்

திருக்கோவிலுார்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரகண்டநல்லுாரில் நிவாரண உதவி கிடைக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுார் பகுதி பெஞ்சல் புயல் காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதில் மார்க்கெட் கமிட்டி பகுதியில் உள்ளவர்களுக்கு உரிய நிவாரண உதவியை அதிகாரிகள் விரைவாக வழங்கவில்லை எனக் கூறி, திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில், மார்க்கெட் கமிட்டி அருகே நேற்று மதியம் 1:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் பேச்சுவார்த்தை நடத்தி, நிவாரண உதவிகளை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, 1:20 மணிக்கு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை