மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
07-Jan-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.20 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார்.கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், வருவாய்த்துறை சார்ந்த நிலப்பட்டா குறைகள், நில அளவீடு செய்தல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தொழில் தொடங்க கடனுதவி கோருதல், சாலை அமைத்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தெருமின்விளக்குகள் அமைத்தல் உட்பட கோரிக்கை மற்றும் புகார் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 82 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 4 மனு என மொத்தம் 86 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார். முன்னதாக தண்டுவடம் பாதித்த இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.10 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
07-Jan-2025