மேலும் செய்திகள்
நாயை சுட்டவர் கைது
08-Aug-2025
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்துார்பேட்டை அடுத்த மயிலம் குப்பம் கிராமத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நுாறு நாள் வேலை முறையாக வழங்கவும், சுடுகாட்டுக்கு சாலை வசதி, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4:00 மணிக்கு, திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருநாவலுார் போலீசார் மற்றும் பி.டி.ஓ., செந்தில்முருகன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் நேற்று மாலை 4.40 மணிக்கு, கிராம மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
08-Aug-2025