உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

சங்கராபுரம்:சங்கராபுரத்தில் (மே.,09) பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. சங்கராபுரம் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் இன்று (மே.,09) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை பொது விநியோகத்திட்டம் சார்பில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், மொபைல் எண் மாற்றம், முகவரி மாற்றம் போன்றவை சம்பந்தமாக பொது மக்கள் நேரில் மனு கொடுத்து பயனடையுமாறு வட்ட வழங்கல் அலுவலர் திருமலை பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி