ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பொதுமக்கள் மனு
கள்ளக்குறிச்சி :க.அலம்பளத்தில் ஏரி வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பளத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு:க.அலம்பலத்தில் உள்ள ஏரி பாசன வாய்க்காலை ஒட்டியவாறு பல ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் பயிர்கள் 7 மீ., அகலம் கொண்ட வாய்க்கால் கரை வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்டது.இந்நிலையில், பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், அறுவடை செய்யும் பயிர்களை ஒன்றரை கி.மீ., தொலைவிற்கு சுமந்து செல்ல வேண்டிய நிலை நீடிப்பதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுக்கு முன் மனு அளித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.எனவே, க.அலம்பலம் ஏரி வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.