உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேவனுாரில் பொதுமக்கள் மறியல்

தேவனுாரில் பொதுமக்கள் மறியல்

திருக்கோவிலூர் : அரகண்டநல்லுார் அடுத்த தேவனுார், புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்யவில்லை எனக் கூறி மறியலில் ஈடுபட்டனர்.அரகண்டநல்லுார் அடுத்த தேவனூர், புதுநகர் பகுதி வெள்ளத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் வடிந்தும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றபடவில்லை.அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை 6:30 மணிக்கு திருக்கோவிலூர் - வேட்டவலம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத், பி.டி.ஓ.,கள் ஜெகநாதன், சண்முகம், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து 6:45 மணிக்கு மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை