மேலும் செய்திகள்
மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடக்கிறது
14-Oct-2026
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ., முருகன் வரவேற்றார். முகாமில் கலெக்டர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று 7 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 26 பேருக்கு பட்டா மாற்றம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 70 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவி, 26 பேருக்கு புதிய ரேஷன் கார்டு, தோட்டக்கலைத் துறை சார்பில் 10 பேருக்கு தென்னங்கன்று உள்ளிட்ட 136 பயனாளிகளுக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தாசில்தார் வைரக்கண்ணன் நன்றி கூறினார்.
14-Oct-2026